குழப்பம்


அது ஒரு பிரபல மேலாண்மைக் கல்லுரி. அந்த செமஸ்டரில் வரிசையாக ஸ்டூடண்ட் செமினார்கள் தினமும் நடந்து கொண்டிருந்தது. ஒருநாளைக்கு ஒரு மாணவர் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் பாடம் எடுக்கவேண்டும். அன்று குழப்பம் (Confusion) எனும் தலைப்பில் ஒரு மாணவர் வகுப்பை கையாளவேண்டும். குறித்த நேரத்துக்கு முன்பே அந்த மாணவன் வகுப்புக்கு வந்திருந்தான். நிறைய புத்தகங்கள் அவன் முன் குவிந்திருந்தது. தன்னுடைய நோட்டில் தீவிரமாக குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தான்.


வகுப்புக்கான நேரம் துவங்கியது. மற்ற மாணவர்கள், அவனது வகுப்பை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். மதிப்பிடும் ஆசிரியரும் வந்துவிட்டார். வகுப்புக்கான நேரம் கரைந்து கொண்டிருந்தது. அவன் தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. சக மாணவர்கள், அவனுக்கு வகுப்பை பற்றி ஞாபகப்படுத்தி வகுப்பெடுக்க துரிதப்படுத்தினர். ஆசிரியரும் கொஞ்சம் கடுப்புடன் அவனைப் பார்த்து, வகுப்பெடுக்க அழைத்தார். இவன் அசைந்து கொடுப்பதாக இல்லை. தொடர்ந்து, அவன் எதோ ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தான்.

மாணவர்களுக்கு பெரிய குழப்பம். பொதுவாக அவன் நன்றாக படிக்கக்கூடிய நல்ல மாணவன். அன்று ஏன் அப்படி செய்கிறான் என புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தனர். வகுப்புக்கான நேரம் ஓடிக்கொண்டிருந்தது. 15 நிமிடம், கரைந்துவிட்டது. இப்போது மாணவர்கள் அவனைப்பார்த்து கத்த ஆரம்பித்தனர். ஆசிரியர் கடைசி எச்சரிக்கை விடுத்தார். அவன் இப்போது வகுப்பெடுக்க வரவில்லையென்றால், அந்த அசைன்மெண்டுக்கான மதிப்பெண் தரப்படாது என்றும் சொல்லிவிட்டார். அப்போதும் அவன் அசைந்து கொடுக்கவில்லை.

கடைசியில், "இன்றைய வகுப்பு கேன்சல் செய்யப்படுகிறது" என சொல்லிவிட்டு ஆசிரியர் எழுந்து வெளியே செல்ல எத்தனித்தபோது, அந்த மாணவன் வேகமாக எழுந்து மேசைக்கு முன் நின்றான். "இன்று நான் எடுக்கவேண்டிய பாடம் முடிவுக்கு வருகிறது" என்று சொல்லிவிட்டு, "நான் பாடம் எடுக்கவராதபோது, உங்கள் மனநிலை எப்படி இருந்தது?" எனக்கேட்டான். அனைவரும், "ஒரே குழப்பமாக இருந்தது" என்றனர். "அதைத் தான் நான் எதிர்பார்த்தேன், இந்த குழப்பத்தின் போது உங்களின் மனதில் ஓடிய எண்ணங்கள் என்ன" என்று கேட்டு அதிலிருந்தே, குழப்பத்தின் தன்மை, அதனை மேலாண்மை செய்யும் விதம் பற்றி கருத்துக்களை அடுக்கிச்சென்றான். அந்த ஆண்டின் மிகச்சிறந்த வகுப்பாக அது அமைந்திருந்தது.

6 comments:

மதுரை சரவணன் said...

குழப்பம் இல்லாமல் ஒரு குழப்பமான வகுப்பை அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

ஒரு கோப்பை வாழ்க்கை said...

நன்றி சரவணன். குட்டை குழம்பாம மீன் பிடிக்கமுடியுமா.,

sudhanthira said...

உங்கள் பதிவு நன்றாக உள்ளது.
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி

ஒரு கோப்பை வாழ்க்கை said...

நன்றி சுதந்திரா... பின்னுட்டத்துக்கும் புதிய தகவலுக்கும்.

கே.ஆர்.பி.செந்தில் said...

வித்தியாசமான அணுகுமுறை ...

ஒரு கோப்பை வாழ்க்கை said...

நன்றி செந்தில். இது உண்மையில் நடந்த விஷயம். உடன் பணிபுரியும் நண்பர் பகிர்ந்துகொண்டது.

Post a Comment

இத பத்தி நீங்க என்ன சொல்றீங்க...