படிக்காத மேதைகள்


ஒருமுறை திருப்பதிக்கு போயிருந்தேன். அதிகாலையில் மொட்டையடித்துவிட்டு பக்கத்திலேயே குளிக்க பாத்ரூம்கள் இருந்தன. எப்பவுமே ஏடுகொண்டலுவாடாவில் கூட்டம் இருக்கும் என்பதால், குளிப்பதற்கான வரிசை மிக நீண்டிருந்தது. நானும் என்னுடைய நண்பர்களும் வரிசையில் இடம் பிடித்துக்கொண்டு நின்றோம். ஒரு பக்கெட் வெந்நீர், ஐந்து ரூபாய். பாத்ரூமுக்கு வெளியில் உள்ள சிப்பந்தியிடம் 5 ரூபாய் கொடுத்துவிட்டு ஒரு பக்கெட் தண்ணீரை உள்ளே எடுத்துச்செல்லாம். குளித்து முடித்த பிறகு, வெளியே வெற்று பக்கெட்டை வைத்துவிட வேண்டும்.

வரிசையில் எனக்கு முன் ஒரு எட்டுப்பத்துப் பேர் நின்றிருந்தார்கள். என்னுடைய நிர்வாக மூளைக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. பக்கெட்டை எடுத்து உள்ளே போன பின், அவர் குளித்துமுடித்து வெளியே வருவது குளிப்பவர் கையில் உள்ளது. ரொம்ப நேரம் குளிப்பவர் உள்ளே போனால் வெளியே காத்திருப்பவர் எண்ணிக்கை கூடும். பாத்ரூமை காண்ராக்ட் எடுத்தவருக்கும் வருமானம் குறையும். ஆனால் சொல்லி வைத்தார் போல உள்ளே குளிக்கப் போகுபவர் அதிகபட்சம் 5 நிமிடத்துக்குள் வெளியே வந்துகொண்டிருந்தனர்.

நான் காத்திருப்பதை பழி தீர்த்துக்கொள்ளும் விதமாக எப்படியும் கால் மணி நேரத்துக்கு குறையாமல் வெளியே வரக்கூடாது என முடிவெடுத்துக்கொண்டேன். அதிகாலையில், அந்தக்குளிரில் நீண்ட நேரம் குளிப்பது சுகமான விஷயமும் கூட. என்னுடன் வந்திருந்த நண்பர்களிடமும் இதை சவாலாக சொல்லியிருந்தேன்.

என் முறை வந்தது. 5 ரூபாய் கொடுத்துவிட்டு பாத்ரூம் உள்ளே சென்ற நான், 4 நிமிடத்துக்குள்ளாக வெளியே வந்துவிட்டேன். ஒன்னுமில்லைங்க. ரெண்டே தந்திரம் செய்திருந்தார்கள். உள்ளே இருக்கும் பாத்ரூமுக்கு தாழ்பாள் போடவில்லை. அதே போல், கொடுத்த எல்லா பக்கெட்டிலும் கீழே சின்ன துவாரத்தைபோட்டிருந்தார்கள். எப்படி பார்த்தாலும் பக்கெட் தண்ணி, 5 நிமிடத்துக்கு மேல் நிற்காது.

தன்னால் கட்டுப்படுத்தமுடியாத தன்னிச்சையான செயல்பாட்டை கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வித்தைப் பற்றி, மாதக்கணக்கில் எம்.பி.ஏவில் பாடம் எடுப்பார்கள். ஆனா, இவிங்கல்லாம் எந்த ஐ.ஐ.எம்மில் நிர்வாகம் படிச்சாங்களோ.    

4 comments:

இரகுராமன் said...

arumai ponga ... thoongitu irukkum moolaiyai thatti ezhupum thiramai panathukku undu ..

business panrathu na summavaa.. ungala maathiri ethana pera thinamum samaalika vendi kadakku :)

ஒரு கோப்பை வாழ்க்கை said...

ரொம்பச் சரி ரகு... நம்மல்லாம் பிஸ்கோத்து. ஒரு நாளைக்கு கோயம்பேடு மார்கட்ல காய்கறி விக்கவிட்டா நம்ம தாவு தீந்துடும். ஏதோ, தட்டுத்தடுமாறி கொஞ்சம் படிச்சதால ப்பேனுக்கு கீழ உக்காந்து, உலகத்துக்கே அட்வைஸ் பண்ணிட்டிருக்கோம்.

Dr.G.SANKARANARAYANAN said...

அருமையான கோணத்தில் கட்டுரை.உக்காந்து யோசிப்பாங்களோ

ஒரு கோப்பை வாழ்க்கை said...

ஆமாம் சங்கரா. உக்காந்து, இதுக்காகவே ரூம் போட்டு யோசிப்பாங்க...

Post a Comment

இத பத்தி நீங்க என்ன சொல்றீங்க...