கொக்குக்கூட்டம்



ஒரு கொக்குக்கூட்டம் வலசை போய்க்கொண்டிருந்தது. 100க்கும் மேலான பறவைகள் தமக்குள் கத்திக்கொண்டும், உற்சாகமாகவும் மேற்கொண்ட நீண்ட பயணம். இடையே நீர்நிலைகளுடன் கூடிய சிறு காடு தென்பட்டதால், எல்லாப்பறவைகளும் இளைப்பாறி செல்லாம் என கீழிறங்கின. பறவைகள் மகிழ்வுடன் கிடைத்த காய்கனிகளை உண்ண ஆரம்பித்தன.

இரையை தேடிக்கொண்டிருக்கும் போது, ஒரு குறிப்பிட்ட இடத்தில், சதுப்பான புதைகுழியில் சில பறவைகள் மாட்டிக்கொண்டன.  ஆபத்தை புரிந்துகொண்ட ஓரிரு பறவைகள் வெளியேற, இரண்டு பறவைகள் மட்டும் வசமாக புதைகுழியில் சிக்கிக்கொண்டன. தளர்வான புதைகுழி மண் அந்த இரண்டு பறவைகளையும் கீழே இழுக்கத் தொடங்கியது. இதைப்பார்த்து கரையில் நின்ற மற்றப்பறவைகள் பதற்றத்துடன் கத்திக்கொண்டிருந்தன.

புதைகுழியில் மாட்டிக்கொண்ட இரண்டு பறவைகளும் பெருங்கஷ்டத்துடன் வெளியே வர போராடிக்கொண்டிருந்தன.  அவற்றின் போராட்டத்தை கண்ட மற்ற பறவைகள், மாட்டிக்கொண்ட பறவைகளின் கஷ்டத்தைப்பார்த்து துக்கம் தாளாமல், "வேண்டாம், முயற்சி செய்யாதீர்கள், இது கடினமான புதைகுழி. வெளிவரமுடியாது. அமைதியான மரணத்தை எதிர்கொள்ளுங்கள். கடைசி நேரத்தில் உங்களை கஷ்டப்படுத்திக்கொள்ள வேண்டாம்" என தொடர்ந்து கூச்சலிட்டன. இரண்டு பறவையும் புதைகுழியின் தன்மையையும் தமது இயலாமையையும் புரிந்து கொண்டன. ஒரு பறவை நம்பிக்கை இழந்தது. வெளியிலிருந்து சொல்பவர்களுடைய கருத்தை ஆமோதித்து தன்னை அமைதிப் படுத்திக்கொண்டது. மெதுவாக புதைகுழியில் தன்னை புதைத்துக்கொண்டது.

உடன் போராடிக்கொண்டிருந்த பறவைக்கு இதைப்பார்த்ததும் ஆச்சரியம். இன்னும் பலத்துடன் வெளியே வர போராடியது. இது வெளியிலிருந்த பறவைகளுக்கு வருத்தத்தை அளித்தது. போராடிக்கொண்டிருந்த பறவையின் மீது நம்பிக்கையிழந்து, அமைதி கொண்டு, மரணத்தை எதிர்கொள் என வலியுறுத்தின. அந்த ஒரு பறவை, தொடர்ந்து வெளியே வர தன்னாலான எல்லா முயற்சிகளையும் செய்துகொண்டே இருந்தது. ஒரு அற்புதத் தருணத்தில், புதைமண்ணில் சிக்கிய இறக்கை வெளியே வர, துள்ளிகுதித்து கரைக்கு வந்து சேர்ந்தது.

மற்ற பறவைகளுக்கெல்லாம் அதிசயமாக வாயடைத்துப்போயின. மீண்ட பறவையின் மன உறுதியையும் போராட்டத்தையும் பாராட்ட ஆரம்பித்தன. மீண்ட பறவை, ஒன்றும் பதிலளிக்காமல் மற்ற பறவைகளை புரியாதது போல் பார்த்தது.

மீண்ட பறவைக்கு காது கேட்காது என்பது கொஞ்ச நேரம் கழித்துதான் மற்ற பறவைகளுக்குத் தெரியவந்தது.

8 comments:

இராகவன் நைஜிரியா said...

முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் என்று சொல்ல வந்து...

கடைசி ட்வுஸ்ட் எதிர் பார்க்கவில்லை..

ஒரு கோப்பை வாழ்க்கை said...

இராகவன்ஜி, வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் ரொம்ப நன்றி.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை........

வாழ்துக்கள்

மு.இரா said...

நன்று. காது கேக்காத பறவை, மொழி பேசும் பறவை. கற்பனை நன்றாக உள்ளது. முயற்ச்சியில் தோற்கலாம், முயலுவதில் தோற்க்ககூடாது எண்பதற்க்கு நல்ல உதாரணம் இந்த கதை. (ஆனா,பாருங்க நானும் ஒரு நல்ல பொண்ணா, லவ் பண்ண பார்க்குறேன்... ஆனா, செட்டே ஆக மாட்டேங்குது. ஏங்க???)

ஒரு கோப்பை வாழ்க்கை said...

நன்றி மு.இரா. ஒரு கடினமான செயலில் ஈடுபடும் போது, மற்றவர்களுடைய விமர்சனம் நம்மை நம்முடைய திறனை நேரடியாக பாதிக்கிறது.

நல்ல பொண்ணு வேணும்னு சொல்றீங்க. அப்ப, செட் ஆவது கொஞ்சம் கஷ்டம் தான். எதுவுமே ஈசியா கிடைச்சிட்டா எக்ஸைட்மெண்ட் இருக்காதுங்க. தொடர்ந்து முயற்சி செய்யுங்க பாஸ். ஆல் தி பெஸ்ட்.

ஒரு கோப்பை வாழ்க்கை said...

பாராட்டுதலுக்கு நன்றி உலவு.

Dr.G.SANKARANARAYANAN said...

அந்த செவிட்டுக் கொக்கைப் போலத்தான் நானும் பல பிரச்சினைகளில் இருந்து மீண்டு வந்துள்ளேன்.... அருமையான கதை.

ஒரு கோப்பை வாழ்க்கை said...

நன்றி சங்கரா. பலசமயங்களில் நமது வெற்றி நம்முடைய பலத்தால் வருவதில்லை. சுற்றியிருப்பவர்களின் ஊக்கத்தாலும், பாராட்டுதலாலும் நிகழ்கிறது. அதேபோல், நமது தோல்வி நம்முடைய பலவீனத்தால் வருவதில்லை. சுற்றியிருப்பவர்களின் கிண்டலாலும், அவமதிப்பாலும் நிகழ்கிறது. இதைத் தாண்டி, எப்போதும் செவிட்டுப் பறவையாய் நமது மனம் இருப்பது ஒரு வரம்.

Post a Comment

இத பத்தி நீங்க என்ன சொல்றீங்க...