கோவில் ஏலம்

 
அலுவல் தொடர்பாக வந்திருந்த வெளிநாட்டு நண்பருடன் மதுரை கோவிலுக்கு சென்றிருந்தேன். கோவிலில் சாமிக்கு நேர்த்தியிருந்த புடவைகளை கோவில் நிர்வாகத்தினர் ஏலத்துக்கு விட்டுக்கொண்டிருந்தனர். அதைப் பற்றி கேட்டறிந்த எனது வெளிநாட்டு நண்பர், உற்சாகமாகி தானும் கலந்து கொள்ள விரும்பினார். நாங்கள் கலந்து கொள்ள ஆரம்பித்தபோது, ஒரு பச்சைநிறப் புடவை 140க்கு போய்கொண்டிருந்தது. எனது நண்பர் one sixty என்றார். போட்டிக்கு ஏலத்தைக் கேட்டவர் 165 என்றார். ஏலம் நடத்துபவர் “பத்துப்பத்தா கேட்கனும்” என்று சொல்லவும் போட்டியாளர் 170க்கு வந்தார். நமது நண்பர் one eighty, போட்டியாளர் 190, இவர் two twenty என்றார். ஏலம் சுவாரசியமாக போய் கொண்டிருந்தது. போட்டியாளர் கோவில் புடவையை ஏலத்தில் கேட்டு எடுக்கமுடியாமல் போனால் சாமி குத்தமாயிடும் என்று நினைத்தாரோ என்னவோ, ஒரேயடியாக 250 எனக் கேட்டுவிட்டு என் நண்பரைப் பார்த்தார். ஏலம் நடத்துபவர், he say 250, you say what? என என் நண்பரைப் பார்த்து உடைந்த ஆங்கிலத்தில் கேட்க, அவர் வருத்தத்துடன் மறுத்து வெளியேறினார். வெளியே வந்த பிறகு கொஞ்ச நேரம் கழித்து, “ram, will that cloth worth for 250 dollars?” எனக் கேட்ட போது என் உச்சந்தலை கிர் என்றது.

11 comments:

இரகுராமன் said...

ha ha ... itha naan konjamum ethirpaakala... kalakal .. ippadi ethavathu pannitu kadaisiyaa indiavula enna emaathitaanga nu veliya solluvaangalo ;)

ஒரு கோப்பை வாழ்க்கை said...

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி ரகுராமன்.

கே.ஆர்.பி.செந்தில் said...

என்னது 250 டாலரா.?

ஒரு கோப்பை வாழ்க்கை said...

ஆமாங்க செந்தில், அந்த சமயத்தில் அவர் இந்தியப் பணத்தை பற்றிய நினைக்கவில்லை. பிறகு சுதாரித்துக்கொண்டார்.

சி. கருணாகரசு said...

அடக்கடவுளே..... இன்னவறைக்கும் டாலரிலா கேட்டாரு?

ஒரு கோப்பை வாழ்க்கை said...

ஆமாங்க கருணா. காலக்கொடுமை அது...

Anonymous said...

Avar US dollarai than sonnara illai Kaluthil Podum dollarai sonnaraaaa? Adutha matham En Vestiyai Elam Vidalam endru yosikuren. Ungal Nanbar varvara? 125 dollar Podhum!

Eppadiyo Ezhuthiya vidham suvarasyamaga irunthathu.

K.N.Rajkumar

Mr. Rajkumar K.N said...

Avar US Dollarai Sonnara, Illai Kaluthil Kattum Dollarai sonnara? Adutha matham En vesti matrum pala adaigalai elam vidalam endru uthesithullen? 125 Dollar Pothum.

Ethu Eppadiyo, Neengal ezhuthiya vidam suvarasyamaga irunthathu

K.N.Rajkumar

ஒரு கோப்பை வாழ்க்கை said...

தம்பி ராஜ்குமார். எப்படா ஒரு மாக்கான் கிடைப்பான், போட்டு மொத்தமா மொத்தலாம்னு ஒரு முடிவாத்தான் இருக்கே போல...

Dr.G.SANKARANARAYANAN said...

அமைப்பு மிக அருமை. கருத்துக்களின் வளம் சற்று குறைகிறதோ என்று தோன்றுகிறது. சற்றே கவனம் தேவை.

உயிர் நண்பன் எனச் சொல்லிக்கொள்ள ஆசைப்படும்
முனைவர். க.சங்கரநாராயணன்

ஒரு கோப்பை வாழ்க்கை said...

அன்பு சங்கரா. உள்ளடக்கம் பற்றி கவனப்படுத்தியதற்கு நன்றி.
"நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு" :-))

Post a Comment

இத பத்தி நீங்க என்ன சொல்றீங்க...