நண்பருடைய குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றிருந்தோம். கடவுளைக் காண நீண்ட வரிசை. நண்பரின் 4 வயது குழந்தையை நான் தூக்கிகொண்டேன். “சாமியைப் பார். சாமியிடம் நல்லா படிக்கனும் என்று கேள்” என்றேன். சிரித்துக்கொண்டே மாட்டேன் என்று தலையாட்டினாள். “மிஸ் கிட்ட திட்டு வாங்கக் கூடாது என்று கேள்” என்றேன். இப்பவும் முடியாது என்றாள். இப்போது சுற்றியிருப்பவர்கள் என்னுடன் சேர்ந்து கொண்டனர். “கலெக்டராவனும்னு கேள்”, “சுவாதியோடு சண்டை போடக்கூடாது என்று கேள்”, “அம்மாப் பேச்சைக் கேட்கணும் என்று கேள்”, “ஆரோக்கியமா இருக்கனும்னு கேள்” என குழந்தைக்கான தேவைகள் பல பக்கங்களில் இருந்து வந்து குவிந்தது. எல்லாவற்றையும் ஆச்சரியமாக கேட்டுக்கொண்ட குழந்தை எதற்கும் ஆமோதிக்கவில்லை. வரிசை சாமியை நெருங்கியது. நான் வெறுத்துப் போய், “என்னதான் கேட்கப் போற?” என்ற போது, “விபூதி கேட்பேன்” என்று சொல்லி, பூசாரிக்கு முன் கை நீட்டி சிரித்தாள்.

Category:
child,
god,
கடவுள்,
குழந்தை,
பிரார்த்தனை
11
comments
11 comments:
சமத்துக்குட்டி.
என்னங்க பொசுக்கூனு இப்படி சொலிப்புடுச்சு. சரி விடுங்க. சின்னபுள்ளைக்கு தெரிஞ்சிருக்கு சாமி எல்லாத்தையும் லேட்டாத்தான் குடுப்பாருன்னு.நன்றி.
புதுவீட்டுக்கு வந்தத சொல்லவேயில்லை. “Follower" ஆகலாம்னா, “allow" பண்ணமாட்டேங்குது. கவனிக்கவும்.
அன்பின் கலாநேசன், வருகைக்கு மிக்க நன்றி.
அன்பின் ம.ரா.: மிக்க நன்றி. குழந்தைகளுக்கு நம்மை விட அதிகத் தெளிவு இருக்கும் போல. மின்மினி ப்ளாக் போல, குட்டிக்கதைகள் எழுத இந்த வலைத்தளத்தை ஆரம்பித்தேன். நீளமான கட்டுரைகள் எழுத எனக்கு நேரம் கிடைப்பதில்லை. அதனால போகிற போக்கில் எழுதிச்செல்ல கிடைத்த வாய்ப்பாய் இதை கருதுகிறேன். (இப்ப following சரிசெய்யப்பட்டு விட்டது என நினைக்கிறேன். கவனப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி)
குழந்தைகளின் சிந்தனை வேறு தளத்தில் இயங்குகிறது என்பதற்கு உங்கள் பதிவு சிறந்த எடுத்துக்காட்டு.
நன்றி. உண்மை தான் பின்னோக்கி. குழந்தைகளின் சிந்தனை, சில சமயங்களில் நம்மைப் புரட்டிப் போடவும் செய்கிறது.
கடவுளை பற்றி அதிக நேரம் குழந்தை கிட்ட பேசணும். கடவுள் நம்மை எப்போதுமே பார்த்துகிட்டு தான் இருப்பார் (omni presence), எல்லாம் செய்ய வல்லவர் (omni potent), எதை மாதிரி கருதுகளுள்ள சுலோகம், பாடல்கள், சொல்லிகுடுத்தால்... குழ்ந்தை நல்ல பிள்ளையாய் வளர்ந்துவிடும் என்பது, ஒரு தாயான என்னுடைய கருத்து...
நான் புரிந்து கொண்டது வேறு. கடவுள் என்ற கருத்தாக்கம் மனித பயத்தால் எழுந்தது. மனிதன் தரிகெட்டு அலையாமல் ஒழுக்கத்துடன் வாழ எதோ ஒரு கட்டுப்பாடு தேவைப்பட்டது. அதனை இயற்கை என்கிறோம், கடவுள் என்கிறோம். அடிப்படையில் கடவுளைப் பற்றிய சிந்தனையில், மனித மனம் தேவைகளையும் ஆசைகளையும் சார்ந்து தான் இயங்குகிறது.
குழந்தைகளின் சிந்தனைத் தளம் வேறு. அவர்களுக்கு நாளை பற்றிய பயமோ, தேவையோ எதுவும் இல்லை. நிகழ்காலத்தில் வலியோ மகிழ்வோ அதனை முழுமையாக வாழ்பவர்கள் குழந்தைகள். அதனை நாம் புரிந்து கொள்ளாமல் கடவுளை வரம் அளிக்கும் இயந்திரமாக நினைக்கச்செய்கிறோம். அங்கு தான் பிழை ஏற்படுகிறது.
கடவுளைப்பற்றி எந்த சூப்பர் இமெஜையும் கொடுக்காமல், ஒரு நண்பனைப் போல் குழந்தையை எதிர்கொள்ளச் செய்யுங்கள். அற்புதம் நடக்கும்.
அவ வாங்கின விபூதில, நீங்க பங்கு கேடீங்க தான?? உண்மைய சொல்லுங்க :P
வாங்க ரகுஜி. நாம தமிழ்நாட்டுல பிறந்துட்டு பங்கு கேட்காம இருப்பமா...
கடவுள் என்பது மனித பயத்தால் எழுந்த கருத்தென்றாலும் தர்க்க முறைப்படியான வாதத்தில் ஒத்துக்கொள்ளக் கூடிய கருத்துருவாக்கமே. அல்லது இயற்கையென்று கூறினால் ஜடத்தன்மையுடைய இயற்கைக்குப் படைக்கும் வல்லமைமையில்லை என்னும் கருத்து மாறுபாட்டை எதிர்நோக்க வேண்டிவரும். ஆகவே, தர்க்க முறைப்படியும் கடவுளை ஒப்புக்கொள்ளலாம் என்பது என் கருத்து.
மேலும் தத்துவங்களின் படி இறைவனைத் தேடுதலுக்கு முதல் படி அவனிடம் ஏதாவது கேட்டு அதன்மூலம் நம்பிக்கைக்கு அடிகோலுவதுதான். பள்ளியில் சேர்க்க மிட்டாயைக் காட்டுவது போல கடவுள் இதைக் கொடுப்பார் என்ற துவக்ககால நம்பிக்கையை ஊட்டுவது அவசியமாகிறது.
நண்பனைப் போல எதிர்கொண்டால் நம்மைப் போன்றவர் என்ற சாதாரணநினைவு தோன்றி பரம்பொருள் என்னும் கருத்துருவை அழித்துவிடும். ஆகவே எல்லாவல்லமையும் நிறைந்தவர். அவரிடம் வேண்டிக்கொள் என்னும் பரிந்துரை குழந்தைகள் அளவில் சரியானதே என்பது எனது புரிதல்.
தவறாயின் மன்னிக்க.
ஆனால் சிலர் ஏதேனும் வாங்கவேண்டும் என்ற கோரிக்கைகளோடே கடைசிவரையில் மிட்டாயில் முனைப்போடு இருப்பதுதான் வருந்தத் தக்க விஷயம். ஆனாலும் பரம்பொருளைப் புரிதல் என்னும் மிகப்பெரிய செயலுக்குத் தகுதியானவர்கள் சிலரே இருக்க முடியும் என்பதனால் பல ஜன்மங்களை ஒப்புக்கொள்ளும் நம்முடைய ஸித்தாந்தங்கள் பிறகு எப்போதாவது மிட்டாய் ஆசை போய் மேலான எண்ணங்கள் தோன்றலாம் என்று வழிகாட்டுகின்றன. ஆகவே இத்தகைய புரிதல் சரியென்றே தோன்றுகிறது.
Post a Comment
இத பத்தி நீங்க என்ன சொல்றீங்க...